Search

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்..! ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்..!

 தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணைபாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கின் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படும் இடங்களில் வெளிநாட்டு பறவைகள் வயல்வெளிகளுக்கு வந்து முகாமிடுவது வழக்கமாக வைத்துள்ளது.  அதேபோல் இந்த ஆண்டும் வயல்வெளிகளில் உள்ள புழு, பூச்சிகள் உள்ளிட்ட இறைகளை உண்பதற்க்காக வெளிநாட்டு பறவைகள் அதிகம் வர துவங்கியுள்ளன.

மேலும் இனப் பெருக்கத்திற்காக வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நீள மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பிளமீங்கோ, அகல வாயான், கருப்பு உள்ளான், போன்ற பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், வயல்வெளிகளில் தேங்கியுள்ள நீரில் இறையை தேடி வெளிநாட்டு பறவைகள் இங்கும் அங்கும் பறந்து வருவது பொது மக்களையும் , சுற்றுலா பயணிகளின் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

0 Comments:

Post a Comment