Chennai Mega Private Job Fair 2023: சென்னையில் 15 ஆயிரம் இடங்களுக்கு முகாம்...! - Agri Info

Adding Green to your Life

October 25, 2023

Chennai Mega Private Job Fair 2023: சென்னையில் 15 ஆயிரம் இடங்களுக்கு முகாம்...!

 சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இணைந்து நடத்தும், இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 15 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

எப்போது முகாம்...!

மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில், டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

சென்னை. 600 015.

என்ற இடத்தில் நடக்கும் முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை பூர்த்தி செய்யும் முனைப்பில் உள்ளன.

8 முதல் பி.இ., வரை

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கயவிவரக் குறிப்புடன் (Bio-Data) ஆகியவற்றை நேர்காணலின்போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கவுள்ளனர்.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

ஊதியம்

சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள Cube Enterprises, Channelplay, DELPHI TVS TECHNOLOGIES PVT LTD ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பெறுவர்.

மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment