JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் பதவிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 26.10.2023 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
JIPMER காலிப்பணியிடங்கள்:
Junior Medical Officer பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.
Officer வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி:
- MCI அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரியில் இருந்து MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஒரு பெரிய அரசாங்கத்தில் மருத்துவம்/குழந்தை மருத்துவம் பிரிவில் ஜூனியர் ரெசிடென்டாக ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
- மருத்துவ ஆராய்ச்சி முறைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
- கணினி பயன்பாடுகள் மற்றும் புள்ளிவிவர மென்பொருள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.10.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
🔻🔻🔻
Click here for latest employment news
No comments:
Post a Comment