ரூ.2,08,700/- மாத சம்பளத்தில் NVS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Executive Engineer பணியிடங்களை நிரப்ப Navodaya Vidyalaya Samiti (NVS) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
NVS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- NVS நிறுவனத்தில் Executive Engineer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.
- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 07 / 10 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- 20.11.2023 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Level – 11 படி, ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் இப்பணிக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NVS விண்ணப்பிக்கும் வழிமுறை:
Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் applications.nvs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.11.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment