Search

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

 

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (NWDA) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 30.10.2023 அன்று வெளியிட்டுள்ளது. இதில் Superintending Engineer, Deputy Director / Executive Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,09,200/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NWDA பணியிடங்கள்:

NWDA நிறுவனத்தில் காலியாக உள்ள Superintending Engineer பணிக்கு என 04 பணியிடங்களும், Deputy Director / Executive Engineer பணிக்கு என 05 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

NWDA பணிகளுக்கான கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NWDA பணிகளுக்கான அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NWDA பணிகளுக்கான வயது விவரம்:

இந்த NWDA நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

NWDA பணிகளுக்கான ஊதிய விவரம்:
  • Superintending Engineer பணிக்கு ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை என்றும்,
  • Deputy Director / Executive Engineer பணிக்கு ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
NWDA தேர்வு செய்யும் முறை:

இந்த NWDA நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

NWDA விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் (28.12.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

0 Comments:

Post a Comment