2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபரில் வெளியிட்டது. அதன்படி, “ தமிழ் - 394, ஆங்கிலம் - 252, கணிதம் - 233, மற்றும் இயற்பியல் - 292 என மொத்தம் 2,222 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
இதற்கு, நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் https://www.trb.tn.gov.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நேரடி முறையில் தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.7ஆம் தேதிவரை விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம்.
இந்தத் தேர்வில் ஓபிசி, எம்.பி.சி மற்றும் பட்டியலின, பழங்குடியின பட்டதாரிகள் 45 மதிப்பெண் பெற வேண்டும் என்றும் பொதுப்பிரிவினர் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் உள்ளன. இருப்பினும் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔻🔻🔻
No comments:
Post a Comment