Search

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 25 காலியிடங்கள் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 25 காலியிடங்கள் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் UDC, Personal Assistant, Assistant Professor, Associate Professor, Professor ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 01.12.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக பல்கலைக்கழக பணியிடங்கள்:

CUTN பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Upper Division Clerk – 02 பணியிடங்கள்
  • Personal Assistant – 01 பணியிடம்
  • Assistant Professor – 02 பணியிடங்கள்
  • Associate Professor – 11 பணியிடங்கள்
  • Professor – 08 பணியிடங்கள்
CUTN பணிகளுக்கான கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Upper Division Clerk – Bachelor’s Degree
  • Personal Assistant – Bachelor’s Degree
  • Assistant Professor – Master Degree, Ph.D
  • Associate Professor – Master Degree, Ph.D
  • Professor – Master Degree, Ph.D
CUTN பணிகளுக்கான வயது:
  • Upper Division Clerk பணிக்கு அதிகபட்சம் 32 வயது எனவும்,
  • Personal Assistant பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
CUTN பணிகளுக்கான சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 4 / 6 / 10 / 13A / 14 என்ற ஊதிய அளவுகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

CUTN தேர்வு செய்யும் விதம்:

இந்த பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Short List மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

CUTN விண்ணப்ப கட்டணம்:
  • UR / OBC / EWS – ரூ.750/-
  • SC / ST / PWBD / CUTN ஊழியர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது
CUTN விண்ணப்பிக்கும் விதம்:
  • விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.12.2023) ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.12.2023) தபால் செய்ய வேண்டும்.
Download Short Notification Link 1
Download Notification Link 1
Download Short Notification Link 2
Download Notification Link 2
Online Application Link 

0 Comments:

Post a Comment