தமிழக அரசு அலுவலகத்தில் வேலை.. நவ.30 கடைசி நாள் – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் பதவியில் ஒரு காலியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணியில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18536 சம்பளம் வழங்கப்படும். B.A (Social work/ sociology/ social science படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு 42 வயதிற்கு மேல் இருக்க கூடாது என வயது வரம்பு இருக்கிறது.
இந்த பணியில் சேர விண்ணப்பங்களை http://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் A80, 10வது குறுக்கு தெரு, அண்ணாநகர், செங்கல்பட்டு 603001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04435006105 எண்ணை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன் 30.11.2023 அன்று மாலை 5.45க்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment