தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை ( Assistant in Cooperative Institutions) நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆள்சேர்க்கை மூலம் கிட்டத்தட்ட 3,000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஆள்சேர்க்கை நடவடிக்கை இதுவாகும். அரசு வேலையை தங்கள் கனவாக கொண்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 3,000
அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்திற்கு (DISTRICT RECRUITMENT BUREAU-2023 ) சென்று காலியிட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். உதாரணாமாக, சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் மட்டும் 132 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பம் செய்ய வேண்டிய கடைசி நாள் : 01.12.2023 மாலை 5.45 மணி வரை;
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 24.12.2023
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் எஸ்சி/எஸ்டி/பிசி/ஓபிசி/ஓபிசி முஸ்லீம் மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், மற்றும் அனைத்து பிரிவுகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதர வகுப்பினர் (ஓசி) 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (Any Degree) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.
1.தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management).
2. சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயிற்சி (Higher Diploma in Cooperative Management).
இருப்பினும், பின்வரும் பட்டப் படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள்.
வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்;
பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு;
எம்.காம் (கூட்டுறவு);
எம்.ஏ (கூட்டுறவு);
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும், கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு;
• பி.ஏ (கூட்டுறவு );
பி.காம் (கூட்டுறவு );
தெரிவு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு:
எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
: ரூ.2 லட்சம் வரை மாதச் சம்பளம் : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை : காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவத்தை அந்தந்த மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு இணையதளத்தில் ( District Recruitment Bureau cooperative department ) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment