மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது Young Professional II பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Sc. /B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TANUVAS காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Young Professional II பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.Sc. /B.Tech in agricultural science / B.V.Sc. OR M.Sc/M.Tech/M.V.Sc etc in any branch of science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
TANUVAS தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment