தமிழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூரில் உள்ள ICAR பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் ஆனது Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ICAR-CICR, கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் 11-12-2023 முதல் 12-12-2023 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ICAR-CICR, Coimbatore காலிப்பணியிடங்கள்:
- Young Professional-I – 2 பணியிடங்கள்
- Young Professional-II – 2 பணியிடங்கள்
என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
YP கல்வி தகுதி:
- Young Professional-I – Bachelor Degree in B.Sc in the field of Agriculture or Zoology
- Young Professional-II – Master Degree in M.Sc in the field of Agricultural Entomology or Life Science or Basic Science or Agricultural Economics
சம்பள விவரம்:
- Young Professional-I – ரூ.25,000/-
- Young Professional-II -ரூ.35,000/-
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழகத்தில் மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment