40 பிளஸ்...தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துதா? இப்படி செய்தால் உடல் பருமன் ஓடிப்போகும் - Agri Info

Adding Green to your Life

November 20, 2023

40 பிளஸ்...தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துதா? இப்படி செய்தால் உடல் பருமன் ஓடிப்போகும்

 Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது பலருக்கும் பொதுவாக உள்ள பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பெண்களை அதிகமாகவும், வேகமாகவும் ஆட்கொள்கிறது. அதுவும், 40 வயதை கடந்த பெண்களுக்கு உடல் எடையை குறைப்பதென்பது பெரிய சவாலாகவே உள்ளது. 40 வயதிற்குள், பெண்கள் பெரும்பாலும் வீடு மற்றும் அலுவலக வேலைகளில் பிஸியாகி விடுவார்கள். இதனால் உடற்பயிற்சியில் குறைந்த கவனம்தான் செலுத்துகிறார்கள். பல நேரங்களில், ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் பெண்களின் எடை அதிகரிக்கிறது. இதனுடன், வாழ்க்கை முறை மாற்றங்கள், ஹார்மோன் சமநிலை மற்றும் ப்ரிமெனோபாஸ் அறிகுறிகளால், தொப்பை கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. வயிற்றில் உள்ள கொழுப்பால் பெண்களால் பல ஆடைகள் அணிய முடிவதில்லை, அவர்களின் தன்னம்பிக்கையும் குறைகிறது. தொடர்ந்து எடை அதிகரிப்பதால், பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. 

40 வயதில் தொப்பையை குறைக்கும் வழிகள்

40 வயதுக்கு மேற்பட்ட வயது வரம்பில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வித மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்கவும், தொப்பையை (Belly Fat) கட்டுப்படுத்தவும் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த முறைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

நார்ச்சத்து அவசியம் 

40 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைப்பது மற்றும் தொப்பையை குறைப்பது மிகவும் கடினம். அத்தகைய சூழ்நிலையில், உணவில் நார்ச்சத்து உட்கொள்வதன் மூலம் பசியைக் குறைக்கலாம். நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி செரிமானத்தை குறைக்கிறது. ஓட்ஸ், பீன்ஸ், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து அதன் மூலம் நார்ச்சத்தை சேர்க்கலாம். 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதில் கலோரி அதிகமாக இருப்பதால் இது தொப்பை கொழுப்பை அதிகரிக்கிறது. அதன் வழக்கமான நுகர்வு பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது எடையை (Weight Loss) அதிகரிக்கிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

தொப்பையை குறைக்க, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். இதில் கலோரிகள் குறைவாகவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ளது. இவற்றை உட்கொள்வதால் தொப்பை குறைவது மட்டுமின்றி பல நோய்களும் குணமாகும்.

உடற்பயிற்சி

தொப்பையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தொப்பையை குறைப்பதிலும், தசைகளை வளர்ப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

பதற்றம்

மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனின் வெளியீட்டிற்கு வழிவகுக்கும். இது அடிவயிற்றில் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும். இது தொப்பை கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தை சமாளிக்க தினமும் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சியும் செய்யலாம்.

சரியான உறக்கம்

குறைவான தூக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைவான தூக்கம் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து எரிச்சலும் ஏற்படும். தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அதிகப்படியான உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இது தொப்பை கொழுப்பை அதிகரிக்கிறது.

40 வயதில் தொப்பையை குறைக்க இந்த முறைகளை பின்பற்றலாம். இருப்பினும், இந்த முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், மருத்துவரை அணுகவும்.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment