ரூ.55,000/- மாத ஊதியத்தில் தமிழக அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Aspirational Block Fellow) பணிக்கு என சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் வட்டாரத்தில் இலட்சிய இலக்கு வட்டார திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.55,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசு பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Aspirational Block Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே சிவகங்கை மாவட்ட District Planning Office-ல் காலியாக உள்ளது.
Aspirational Block Fellow கல்வி தகுதி:
Aspirational Block Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Aspirational Block Fellow வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Aspirational Block Fellow மாத சம்பளம்:
Aspirational Block Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
Aspirational Block Fellow தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aspirational Block Fellow விண்ணப்பிக்கும் முறை:
Aspirational Block Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட திட்ட அலுவலக முகவரிக்கு 04.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment