மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் தமிழக ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் தமிழ்நாடு (ESIC TN) தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ESIC TN காலிப்பணியிடங்கள்:
Senior Resident பதவிக்கு என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
ESIC TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MD/ MS/ DNB, M.Sc, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Senior Resident சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 67,700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண்கள் வேட்பாளர்கள்: கட்டணம் கிடையாது
மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 500/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணல் ஆனது 27.11.2023 முதல் 28.11.2023 வரை நடைபெற உள்ளது.
முகவரி:
Office of Dean, ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai
No comments:
Post a Comment