தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.69,920/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TNUIFSL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 13.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Assistant Manager, Officer ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNUIFSL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- TNUIFSL நிறுவனத்தில் Assistant Manager, Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் CMA, CA, BE, B.Tech, MBA, Post Graduate Degree, Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- 01.10.2023 அன்றைய தினத்தின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது, Assistant Manager பணிக்கு 40 எனவும், Officer பணிக்கு 35 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Assistant Manager, Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,979/- முதல் ரூ.69,920/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNUIFSL விண்ணப்பிக்கும் விதம்:
இந்த TNUIFSL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் hr@tnuifsl.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (06.11.2023) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
No comments:
Post a Comment