தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 21.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் : ஜீப் ஓட்டுநர்
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 4
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18-42 வயதுக்கு கீழ் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆதிதிராவிடர் ஆகியோர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதர தகுதிகள்:
மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
ஊதிய விபரம்: ரூ. 19500 - 62000/- மற்றும் இதர படிகள்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://dharmapuri.nic.in/ இணையதளத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), இரண்டாவது தளம், தருமபுரி 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி,வயது,இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment