புலனாய்வுப் பணியகத்தில் ACIO பணிக்கு 990+ காலியிடங்கள் – ரூ.1,42,400/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்!
புலனாய்வுப் பணியகம் (IB) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 995 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.11.2023 அன்று முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புலனாய்வுப் பணியக பணியிடங்கள்:
Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணிக்கு என 995 பணியிடங்கள் புலனாய்வுப் பணியகத்தில் (IB) காலியாக உள்ளது.
ACIO-II / Executive 2023 கல்வி விவரம்:
இந்த புலனாய்வுப் பணியகம் சார்ந்த பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ACIO-II / Executive 2023 வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ACIO-II / Executive 2023 வயது தளர்வுகள்:
- SC / ST – 05 ஆண்டுகள்
- OBC – 03 ஆண்டுகள்
ACIO-II / Executive 2023 ஊதிய விவரம்:
ACIO-II / Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level – 07 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Intelligence Bureau தேர்வு செய்யும் முறை:
இந்த புலனாய்வுப் பணியகம் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test (Tier – I / II), Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Intelligence Bureau விண்ணப்ப கட்டணம்:
- UR / Male / EWS / OBC – ரூ.550/-
- மற்ற நபர்கள் – ரூ.100/-
Intelligence Bureau விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே 25.11.2023 அன்று முதல் 15.12.2023 அன்று வரை https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment