Air India நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனது Cabin Crew (Female) மற்றும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Air India நிறுவன காலிப்பணியிடங்கள்:
Cabin Crew (Female) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Cabin Crew (Female) தகுதி விவரங்கள்:
அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பை படித்திருக்க வேண்டும். தற்போதைய இந்திய பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் இந்தியப் பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
புதியவர்களுக்கு 18-27 வயதுக்கு இடையிலும், அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
🔻🔻🔻
No comments:
Post a Comment