இரயில்வேயில் காத்திருக்கும் Apprentices வேலை – 1832 காலியிடங்கள் || தேர்வு கிடையாது!
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் கிழக்கு மத்திய இரயில்வேயில் (ECR) காலியாக Apprenticeship Trainee பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ITI தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
Apprenticeship Trainee என 1832 பணியிடங்கள் கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) காலியாக உள்ளது.
Apprenticeship Trainee கல்வி விவரம்:
இந்த இரயில்வே துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் / 12ம் வகுப்பு + பணி சார்ந்த துறைகளில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Apprenticeship Trainee வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.01.2023 அன்றைய நாளின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Apprenticeship Trainee வயது தளர்வுகள்:
- SC / ST – 05 ஆண்டுகள்
- OBC – 03 ஆண்டுகள்
- PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
Apprenticeship Trainee சம்பள விவரம்:
Apprenticeship Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
கிழக்கு மத்திய ரயில்வே தேர்வு செய்யும் முறை:
இந்த இரயில்வே துறை சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List, Document Verification, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ECR விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PwBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.100/-
ECR விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 09.12.2023 அன்றைய நாளுக்குள் https://www.rrcecr.gov.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification Link
Online Application Link
🔻🔻🔻
0 Comments:
Post a Comment