Biscuit Side Effects: பிஸ்கெட் பிரியரா நீங்கள்.. இந்த ஆபத்தை தெரிஞ்சுகோங்க! - Agri Info

Adding Green to your Life

November 26, 2023

Biscuit Side Effects: பிஸ்கெட் பிரியரா நீங்கள்.. இந்த ஆபத்தை தெரிஞ்சுகோங்க!

 

Side Effects of Biscuit: டீ, காபியுடன் பிஸ்கட் சாப்பிடுவதைத் யார் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.


இன்றைய அவரச உலகில் நம்மில் பலருக்கு சமைக்கவே நேரம் கிடைப்பதில்லை. அதில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி சமைக்க ஏது நேரம் அவதி அவதியாக காலையில் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு சமைப்பதற்குள்ளாகவே பெண்கள் அசதியடைந்து விடுகின்றனர். அதிலும் வேலைக்கும் போகும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. 

குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் சமைத்து  முடித்து குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தானும் கிளம்புவதற்குள் போதும் போதும் என்று அசந்து விடுகின்றனர். இதில் பெரும்பாலும் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் இடம் பெறுவதும் பிஸ்கெட்தான். குழந்தைகளுக்காவது ஸ்நாக்ஸாக பிஸ்கெட் கொடுக்கின்றனர். தாங்கள் காலை உணவுக்கே பிஸ்கெட் டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிட்டு விட்டு ஓடி விடுகின்றனர். 

பலர் பிஸ்கட்டை எப்போதாவது லேசான சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடும் போது டீயுடன் பிஸ்கட் சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவார்கள். ஆனால் பிஸ்கட் சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதா? அப்படியானால் இது குறித்து இங்கு பார்க்கலாம்.

பிஸ்கட் அனைவருக்கும் நல்லதல்ல. பிஸ்கட் சாப்பிடுவதால் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வரலாம். இப்போது பிஸ்கெட்டை முற்றிலுமாக யார் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேன்சர் எபிடெமியாலஜி, பயோமார்க்ஸ் மற்றும் தடுப்புகளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அதிகப்படியான பிஸ்கட்கள் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். பிஸ்கட்டில் மாவு நிரம்பி உள்ளதாாக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மாவு தயாரிக்கும் போது நார்ச்சத்து இழப்பு ஏற்படுவதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். அதிக பிஸ்கட் சாப்பிடுவது படிப்படியாக எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.

அதிக பிஸ்கட் சாப்பிடுவது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஸ்வீடனில் 60,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மற்றொரு 10 ஆண்டு ஆய்வு காட்டுகிறது. ஆய்வுக்கு உட்படுததப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் அதிக பிஸ்கட் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, பிஸ்கட்டில் உள்ள அதிக டிரான்ஸ் கொழுப்பு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் அசாதாரண விகிதத்தில் எடை அதிகரிக்கிறது. டிரான்ஸ் கொழுப்பு நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி, தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

பிஸ்கட் இரத்த சர்க்கரையை உயர்த்தும். ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள், பிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால், பெண்களின் கருப்பையில் புற்றுநோய் அல்லது கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment