மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள 1 சமூகப்பணியாளர் பதவிக்கான பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம், சமூக பாதுகாப்புத்துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் (காலிப்பணியிடம்-1) பதவிக்கு மாதம் ரூபாய் 18,536/ தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம் நிரப்பப்படவுள்ளது.
இப்பதவிக்கு விண்ணப்பிக்க இளநிலை (B.A) சமூகப்பணி, சமூகவியல் பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் நலன் / சமூக நலன் சார்புடைய பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஒருவருட ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியிடம் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேனி மாவட்ட வலைதளத்தின் மூலம் (https://theni.nic.in/) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் –II , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி-625531.
என்ற முகவரிக்கு 15.11.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment