மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளில் வெறும் 22 நிமிடங்களில் ஈடுபடுவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே தங்களுக்குத் தெரிந்த பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். ஒரு சிலருக்கு நாள் முழுவதும் அலைந்து திரியும் வேலை என்றால், ஒரு சிலருக்கு பல மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை என்ற நிலை உள்ளது. இவ்வாறு 9 மணி நேரத்திற்கு மேலாக ஒருவர் ஒரே இடத்தில் நாற்காலியில் உட்கார்ந்தபடி பணிபுரியும் போது அவர்கள் பல உடல் நலப்பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
குறிப்பாக NCBI-ன் தகவலின் படி, உட்கார்ந்த இடத்தில் வேலைப்பார்க்கும் போது டிமென்ஷியா, உடல் பருமன், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும் என்பதால் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பலருக்கு அலுவலகப் பணிகளால் உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய முடியாது. இதுப்போன்ற சூழலில் நீங்கள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது.
கடந்த 2003 ஆம் ஆண்டு 2009 ஆம் வரை நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 11,989 பேர் பங்கேற்றார்கள். குறைந்தது 50 வயதுடைய ஸ்வீடன், நார்வே மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். ஆய்வின் போது இவர்கள் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் செயல்பாட்டைப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் 5,963 பேர் 10.5 மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்து வேலை பார்த்துள்ளனர். மீதமுள்ள 6,042 பேர் 10.5 மணி நேரத்திற்கு அதிகமாக உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்துள்ளனர். இதில் 5 ஆண்டு காலத்தில் 10 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை பார்த்தவர்களில் 805 பேர் உயிரிழந்தது ஆய்வுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் தான் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு கூறுவது என்ன?
நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான எட்வர்ட் சாகெல்வ் என்ற ஆய்வு ஆசிரியர் கருத்தின்படி, வேலை பளுவால் உங்களால் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை என்ற கவலை வேண்டாம். கொஞ்ச நேரம் உடல் உழைப்பு கூட கணிசமான பலன்களை உங்களுக்குத் தரக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு நீங்கள் 20 நிமிடங்கள் ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. இதற்கென்று நீங்கள் ஜிம்மிற்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வேலைக்குச் செல்வதற்கு முன்னதாக நீங்கள் பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லலாம். காலையில் சிறிய உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம் என ஆய்வுகள் கூறுகிறது.
நீங்கள் பல மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தாலும், சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் உங்களது உடல் நலத்தைப் பாதுகாக்கும் மற்றும் இறப்பு விகிதத்தையும் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்போது பேசிய அவர், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது இயல்பான ஒன்று. ஆனால் அதை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என கூறினார். எதிர்பாராத விதமாக பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் என தெரிவித்த அவர், குழாயை திறந்து விட்டு, தண்ணீரில் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு முடிந்தால் லேசாக துடைத்து எண்ணெய் மட்டும் போட வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து உடனடியாக மருத்துவமனை சென்று மேற்சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். ஆனால், கண்டிப்பாக, பட்டாசு விபத்து ஏற்பட்டு தீக்காயம் பட்டவுடன், கிருமி நாசினி, டெட்டால், டிஞ்சர் , மாவு உள்ளிட்டவைகளை தீ காயத்தில் போடக்கூடாது. இதனால் செப்டிக் ஆகக்கூடிய வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளார்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment