இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று நமக்கு தெரியும். இந்நிலையில் இளநீரை எப்போது குடிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். இந்நிலையில் காலை 10 மணிக்கு, இளநீர் குடித்தால் உடல் எடை சீராக வைத்துகொள்ள உதவும்.
இது சருமத்திற்கு தேவையான நீர் சத்தை கொடுக்கிறது. பாக்ட்ரீயா தொற்றில் இருந்து நம்மை காப்பாற்ற உதவும். ஒரு கப் இளநீரில் 45 கலோரிகள் இருக்கும். உங்களுக்கு, சோடா அல்லது சுகர் அதிகமாக உள்ள குளிர் பானங்களுக்கு பதிலாக இளநீர் இருக்கும்.
இளநீர் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாலையைவிட காலையில் இளநீர் குடிப்பது நல்லது. உடல் பயிற்சி செய்தவுடன், இயற்கையான முறையில் எலக்ட்ரோலைட்டை உடல் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
இதில் அதிக அளவு பொட்டாஷியம் உள்ளதால், சிறுநீரக பிரச்சனை இருப்போர் மற்றும் இதை எடுத்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில், இளநீர் தூங்குவதற்கு முன்பு குடித்தால், நல்ல தூக்கம் சிலருக்கு வருவதாக கூறப்படுகிறது.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment