Diabetes Symptoms: நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனை. குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை மக்களுக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்குகிறது.
பல நேரங்களில் நீரிழிவு நோயின் (Diabetes) ஆரம்ப அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கின்றன. இவை எளிதில் கவனிக்கப்படாமல் போககலாம். இது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில் நிகழ்கிறது.
நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வரை பல நேரங்களில் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது பற்றியே தெரிவதில்லை.
டைப்-1 நீரிழிவு நோயில், அறிகுறிகள் பொதுவாக ஆரம்பத்தில் தோன்றும். ஒருவர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சில நாட்கள் அல்லது வாரங்களில் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.
சில சமயம் நீரிழிவு நோயின் அறிகுறிகளும் மிகவும் தீவிரமாகவும் இருக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இரண்டு வகையான நீரிழிவு நோய்களிலும் சில ஒத்த அறிகுறிகள் காணப்படுகின்றன. முதலில் டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இரண்டிலும் காணப்படும் ஒரே மாதிரியான அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பசி மற்றும் சோர்வு :
நாம் எந்த உணவை சாப்பிட்டாலும், நமது உடல் அதை குளுக்கோஸாக மாற்றுகிறது. இதனால் உடல் செல்கள் அதை ஆற்றலாகப் பயன்படுத்த முடிகின்றது. ஆனால் குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற செல்களுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. உடல் இன்சுலினை குறைவாக உற்பத்தி செய்தாலோ அல்லது இல்லாமலோ இருந்தால், குளுக்கோஸ் அதை அடையாது. இதனால் உடலுக்கு எந்த சக்தியும் கிடைக்காது. இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிக பசி மற்றும் சோர்வான உணர்வு ஏற்படுகின்றது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
ஒரு சாதாரண நபர் 24 மணி நேரத்தில் 4 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பார். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். பொதுவாக, சிறுநீரகத்தின் வழியாக குளுக்கோஸ் செல்லும் போது, உடல் அதை உறிஞ்சிவிடும். ஆனால் சர்க்கரை நோயால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகங்களால் அந்த குளுக்கோஸை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை. இதன் காரணமாக உடல் அதிக அளவு சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இதனால் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வருகிறது. அதிக சிறுநீர் கழிப்பதால், தாகமும் அதிகமாக இருக்கும். பிறகு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
வறண்ட வாய் மற்றும் தோல் அரிப்பு:
உங்கள் உடல் சிறுநீர் தயாரிக்க திரவத்தைப் பயன்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலின் மற்ற செயல்பாடுகளுக்கு மாய்ஸ்சரைசர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் நீரிழப்புக்கு ஆளாகி, வாயில் வறட்சி ஏற்படுகின்றது. வறண்ட சருமம் காரணமாக தோல் அரிப்பு தொடங்குகிறது.
மங்கலான பார்வை:
மங்கலான பார்வையும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாகும். உடலில் திரவ அளவில் ஏற்படும் மாற்றத்தால் கண்களின் லென்ஸின் வீக்கம் ஏற்படலாம். இதன் காரணமாக, லென்ஸ்களின் வடிவம் மாறுகிறது. இதனால் கண்களுக்கு கவனம் செலுத்துவதில் சிரமம் ஏர்படுகின்றது.
டைப்-2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் (Type-2 Diabetest Symptoms)
நீண்ட நேரம் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் போது, இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன:
ஈஸ்ட் தொற்று:
நீரிழிவு நோயால்பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம். ஈஸ்ட் குளுக்கோஸில் செழிக்கிறது. அதிக குளுக்கோஸ் இருக்கும்போது அவை வேகமாக வளரும். ஈஸ்ட் தொற்று தோல் மற்றும் மூட்டுகளில் சூடான மற்றும் ஈரமான பகுதிகளில் ஏற்படுகிறது. உடலில் இந்த இடங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது
- விரல்கள் மற்றும் கட்டைவிரல் இடையே
- மார்பகத்தின் கீழ்
- பிறப்புறுப்புகள் மற்றும் அவற்றை சுற்றி
காயங்கள் அல்லது வெட்டுக்கள் மெதுவாக குணமாகுதல்:
நீடித்த உயர் குளுக்கோஸ் அளவுகள் இரத்த ஓட்டத்தை பாதிக்கின்றன. இதன் காரணமாக, நரம்புகள் சேதமடைகின்றன. ஆகையால் காயங்கள் ஆறுவதில் அதிக நேரம் எடுக்கின்றது. நரம்புகள் பாதிக்கப்படுவதால் கால்களில் வலி அல்லது உணர்வின்மை பிரச்சினையும் ஏற்படுகிறது.
டைப்-1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் (Type-1 Diabetes Symptoms)
திடீர் எடை இழப்பு :
உங்கள் உடலால் உணவில் இருந்து ஆற்றலை உருவாக்க முடியவில்லை என்றால், அது தசைகள் மற்றும் உடல் கொழுப்பிலிருந்து ஆற்றலை உருவாக்கத் தொடங்குகிறது. டைப்-1 நீரிழிவு நோயால், உங்கள் உணவுப் பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யாவிட்டாலும் உங்கள் எடை குறையத் தொடங்குகிறது.
குமட்டல் மற்றும் வாந்தி:
உடல் கொழுப்பை எரிப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்கும் போது, அது கீட்டோன்களை உருவாக்குகிறது. இந்தச் செயல்பாட்டில் கீட்டோன்கள் உங்கள் இரத்தத்தில் ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கின்றன. இந்த உயிருக்கு ஆபத்தான நிலை நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள்
பொதுவாக கர்ப்ப காலத்தில் அதிக இரத்த சர்க்கரையின் (Sugar Level) அறிகுறிகள் காணப்படுவதில்லை. தெளிவாகக் காணக்கூடிய அறிகுறிகளில், முதன்மையானது சாதாரண மற்றும் அதிகப்படியான சிறுநீர் கழிப்பது மற்றும் அதிக தாகம் ஆகியவை ஆகும்.
பின்வரும் சோதனைகள் மூலம் இரத்த சர்க்கரை கண்டறியப்படுகிறது
- கடந்த 2-3 மாத சர்க்கரை அளவை HbA1C சோதனை மூலம் கண்டறியலாம்.
- ரேண்டம் இரத்த சர்க்கரை சோதனை - இதற்கு ஃபாஸ்டிங், அதாவது சாப்பிடாமல் எட்டுக்க வேண்டிய தேவை இல்லை.
- ஃபாஸ்டிங் இரத்த சர்க்கரை சோதனை - உணவு உட்கொண்ட 6-8 மணிநேரத்திற்கு பிறகு இதை எடுப்பது அவசியம்.
🔻 🔻 🔻
0 Comments:
Post a Comment