விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistants) பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அடிப்படைத் தகுதிகள்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: ரூ. 15700 - 50000/- மற்றும் இதர படிகள்வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 34 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்நிபந்தனைகள்: காலிப்பணியிங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விழுப்புரம் மாவட்டத்திற்கான https://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சுயமுகவரியுடன் கூடிய தபால்தலை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு 07.12.2023 கிடைக்குமாறு மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுகொள்ளப்படமாட்டாது.
தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment