கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்... உங்க டயட்டை இப்படி மாத்திக்கோங்க..! - Agri Info

Adding Green to your Life

November 30, 2023

கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்... உங்க டயட்டை இப்படி மாத்திக்கோங்க..!

 இன்றைக்கு வாழ்வியல் முறைகளால் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் மரணம் வரைக்கூட கொண்டு செல்கிறது. இதுப்போன்ற நோய் பாதிப்பின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய தொடர்பாக உள்ளது நம்முடைய உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் என்கின்றனர் மருத்துவர்கள். இதுப்போன்ற நோய் பாதிப்புகளில் ஒன்று தான் கொழுப்பு கல்லீரல் நோய். மருத்துவ ரீதியாக கொழுப்பு கல்லீரல் நோய் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

ஒன்று மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non on-alcoholic fatty liver disease- NAFLD) மற்றொன்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் (alcoholic fatty liver disease – AFLD). குறிப்பாக உலக மக்கள் தொகையில் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பானது உலக மக்கள் தொகையில் 25 முதல் 30 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். இந்த பாதிப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையானது என்றாலும் இவை இரண்டிற்கும் ஒரே தொடர்பு என்றால் அது உணவு முறைகள் தான். இந்த சூழலில் தான் ஆரோக்கியமான உணவுகளைக் கடைப்பிடித்து நோயின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோ எப்படி? என இங்கே அறிந்துக் கொள்வோம்.

மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD):

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் எப்பொழுது ஏற்பட்டதோ? அன்றைய நாளிலிருந்து உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் பணிபுரியக்கூடிய சூழல் ஏற்படத் தொடங்கியது. இவ்வாறு உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரியக்கூடிய வாழ்க்கை முறைகள் மற்றும் மோசமான உணவுப் பழக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளால் கல்லீரலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. உடலின் ஒட்டுமொத்த கொழுப்பு உள்ளடக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், NAFLD இன் முக்கிய இயக்கியான இன்சுலின் எதிர்ப்பு எனப்படும் நிகழ்வுக்கு வழிவகுக்கிறது.

உணவு முறை மாற்றங்கள்:

மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பிற்கு என்ன தான் மருந்து, மாத்திரைகளைக் கொண்டு சிகிச்சைகள் அளித்தாலும் உணவு முறையில் நீங்கள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். இதோடு வழக்கமான உடற்பயிற்சி மூலமும் அதிகரித்த உங்களது உடல் எடையை நீங்கள் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

News18

மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் (AFLD): அதிகப்படியாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் நச்சுகள் அதிகளவில் சேர்கிறது. இது கல்லீரலில் வீக்கம், மற்றும் கொழுப்புகள் அதிகளவில் படிகிறது. இதனால் மிகுந்த பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும். எனவே இந்த பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றால், மது அருந்துவதை நீங்கள் கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டும்.

மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களின் கல்லீரல் பாதிப்பைக் குறைக்க உதவியாக உள்ளது. எனவே கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இதுப்போன்ற உணவு முறைகளைப் பின்பற்றினாலும் சுய கட்டுப்பாடு முக்கியம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment