சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் தான் பிஸ்கட்.
அதோடு, அனைத்து தரப்பினரும் காலை எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக, காபியுடன், பிஸ்கட்டையும் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பிஸ்கட்டால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பிஸ்கட் சாப்பிடுவதால், முகப்பரு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சர்க்கரை சத்து அதிகமாக இந்த பிஸ்கட்டுகளிலிருப்பதால், ரத்தத்திலிருக்கின்ற சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. இந்த பிஸ்கட்டுகளில் உடலுக்கு தேவைப்படும் எந்த விதமான ஊட்டச்சத்துக்களுமில்லாதன் காரணமாக, ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும். நீர்சத்து குறைவாக பிஸ்கட்டுகளிலிருப்பதால், நீரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த பிஸ்கட்டுகளை தயார் செய்யும்போது, அத்துடன் சேர்க்கப்படும் ஒரு சில பொருட்களில் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள் ஏதாவது இருந்தால், ஒவ்வாமை உண்டாகும். இதில் நார்சத்து குறைந்தளவே இருப்பதால், மலச்சிக்கலை உண்டாக்கும். மேலும் இதயம் குறித்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிகிறது.பிஸ்கட்களின் கலோரிகள் அதிகளவு இருக்கிறது. அதோடு கார்போஹைட்ரேட் இருப்பதால், உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகளுண்டு.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment