Search

மன அமைதி இல்லாமல் தவிக்கிறீர்களா..? இந்த விஷயங்களை இன்றே செய்யுங்கள்..!

 டலை கொஞ்சம் கூட அசைக்காமல் நாம் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாலும், நம் மனம் மட்டும் ஏழேழு திசைகளுக்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அத்தகைய மனதிற்கு அவ்வபோது சிந்தனைகளில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும். குறிப்பாக மனதை ஆக்கிரமித்துள்ள தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்.

அதிலும், இன்றைக்கு நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் முழுவதும் டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கிறது. அதேபோல அலுவலக வேலை ரீதியாகவும் நம் மனம் மிகுந்த குழப்பம் அடைகிறது. இவற்றில் இருந்து விடுதலை பெற்று, மனதை அமைதியாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

எல்லைகளை நிர்ணயம் செய்யுங்கள் 

நம்முடைய பணி நேரம் என்ன, டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விடுதலை பெறுவது எப்படி என்பதை நாமே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களில் மூழ்கிவிடாமல், தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியம். உங்கள் ஸ்மார்ட் வாட்சை கூட அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது.

ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில், எவ்வளவு நேரத்திற்கு டிவி, ஃபோன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவது என்பதை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் நச்சு வெளியேற்ற காலம்

ஒரு நாளின் குறிப்பிட்ட பொழுதில் டிஜிட்டல் சாதனங்களின் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை என்ற வரையறையை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் இணைய உலகம், டிஜிட்டல் சாதனங்கள் என்று மூழ்கிக் கிடக்காமல் அன்றைய தினம் குடும்பத்தினருடன் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமூக வலைதள நேரம்

தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் சமூக வலைதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் எதிர்மறை சிந்தனைகளை தூண்டும் பதிவர்களை பின் தொடர வேண்டாம் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்து கொள்ளலாம்.

பயனுள்ள நடவடிக்கைகள்

டிஜிட்டல் சாதங்களின் பயன்பாடு நமக்கு ஆரோக்கியமற்றதாகும். அதை குறைத்துக் கொண்டு ஆரோக்கியம் தரும் நடவடிக்கைகளில் நம்மை, நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்குப் பிடித்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

தியானம் செய்யலாம்

மனதை அவ்வப்போது ஒருநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் செய்வது சிறப்பான பலனை தரக் கூடும். கற்பனை உலகை விட்டு வெளிவந்த, எதார்த்த உலகின் மீது உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள்.

தேவையான நடவடிக்கைகள்

மனதை எப்படியெல்லாம் அமைதியாக வைத்துக் கொள்வது என்று பட்டியல் போட்டு செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பது குறித்து கவனம் செலுத்துவதுடன், ஆழ்ந்த உறக்கம், நல்ல தொடர்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment