குளிர்காலத்தில் பொதுவாகவே எனர்ஜி குறைவாக இருக்கும்; இன்னும் கொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்று சோர்வாக இல்லை என்றால் கூட தோன்றும்! இதற்கு பொதுவாக விண்டர் ப்ளூஸ் என்ற பெயர் இருக்கிறது.
இந்த மனநிலை, சிலருக்கு மன அழுத்தமாக மாறும். இதனால் குளிர்காலத்தில் டிப்ரெஷன் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. மருத்துவ ரீதியாக சீசனல் அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் (SAD) என்று கூறப்படுகிறது. அதாவது குளிர்காலத்தில் மட்டும் ஏற்படக்கூடிய ஒரு விதமான மன அழுத்தமாகும். பகல் நேரம் குறைவாக இரவு நேரம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் இந்த நிலை ஏற்படும். ஆனால் உணவில் சில விஷயங்களை மாற்றுவதன் மூலம் குளிர்காலத்தில் கூட சுறுசுறுப்பாக செயல்படலாம்.
ஆர்வமின்மை, மூட் ஸ்விங்க்ஸ், உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்வதில் கூட ஆர்வமின்மை, சோர்வு, தூங்குவதில் மாற்றம், நீண்ட நேரம் தூங்க வேண்டும் போன்ற உணர்வு, பசி உணர்வில் மாற்றம், கவனம் செலுத்த முடியாமை போன்றவை விண்டர் ப்ளூஸ் அறிகுறிகள்.
உணவுகள் எப்படி இந்த குளிர்கால மன நிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவும்
குளிர்காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் இதில் ஒரு சிலர் ஒரு சிலருக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும் அவர்கள் அவர்களுக்கு வின்டர் பூசனைவர்கள் எதுவும் ஏற்படாது ஆனால் இது போன்ற குளிர் காலத்தில் மனநிலை மாற்றத்தால் உன் சால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஒரே மாதிரியான பொருந்தாது ஆனால் ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் இந்த அறிகுறிகளை ஓரளவுக்கு குறைக்க முடியும்
எந்த காலமாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வது உங்களுடைய எனர்ஜி லெவலை அதிகரிக்க உதவும். அது மட்டும் இல்லாமல் சோர்வாக டல்லாக இருக்கும் மனநிலையையும் இது மேம்படுத்தி உற்சாகம் ஆக்கும்.
குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாக இருக்கும். அதாவது சூரியனின் ஒளி ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனவே உங்களால் முடிந்த அளவு சூரியஒளி உங்கள் மேல் படும்படி வெளிப்புறத்தில் நேரம் செலவிடுங்கள். இது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி உடலின் இயற்கையான தூக்கம்-விழிப்பு சுழற்சியை சீராக்கும்.
போதுமான அளவு தூங்க வேண்டும். உங்கள் உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு கிடைக்கும் பொழுது மன அழுத்தம் குறையும்.
குளிர் காலத்திற்கு ஏற்றார்போல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
விண்டர் ப்ளூஸ் அறிகுறிகளை குறைக்க உதவும் உணவுகள்
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள்: இந்த உணவுகள் மன நிலையை மேம்படுத்தும் மற்றும் அழற்சி-எதிர்ப்பு தன்மை கொண்டவை. கொழுப்பு நிறைந்த மீன் வகைகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 நிறைந்துள்ளது.
வைட்டமின் பி நிறைந்த உணவுகள்: மூளையின் செயல்பாடுகளுக்கும், மனநிலையை சீராக வைப்பதற்கும் வைட்டமின் பி சத்து மிக மிக அவசியம். தானியங்கள், கொட்டை வகைகள் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் லீன் புரதம் ஆகியவற்றில் வைட்டமின் பி நிறைந்துள்ளது.
வைட்டமின் டி உணவுகள்: வைட்டமின் டி உங்களுடைய மனதில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை சீராக்கி சமநிலையில் வைக்க உதவும். அது மட்டுமல்லாமல் உடலில் இயற்கையாக தூங்கும் மற்றும் விழிக்கும் சைக்கிளை ரெகுலேட் செய்யவும் உதவும். குளிர்காலத்தில் வெயில் குறைவாக இருப்பதால் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், முட்டை, காளான் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்; மீன் உணவுகளை சாப்பிடலாம்.
ட்ரிப்டோஃபான்: ட்ரிப்டோஃபான்என்பது ஒரு வகையான அமினோ ஆசிட் ஆகும். இதை உடல் பயன்படுத்தி, மனநிலையை சீரமைக்கும். செரோடொனின் என்ற ஹார்மோனை சுரக்க உதவுகிறது. பால், சீஸ், வெண்ணெய், டர்க்கி, சிக்கன் போன்ற உணவுகளில் ட்ரிப்டோஃபான் அதிகம் இருக்கிறது.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment