நிப்ட்-டீ பயிற்சி மையத்தில் இலவச சணல் பொருள் உற்பத்தி பயிற்சி
வேலை வாய்பற்ற இளைஞர், இளம்பெண்களுக்கு, சணல் பொருட்கள் உற்பத்தி பயிற்சி அளிக்க, நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் முடிவு செய்துள்ளது.திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி மற்றும், மத்திய, மாநில அரசு திட்டங்களில், இலவச பயிற்சி அளிக்கும் மையம், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இயங்கி வருகிறது.
கடந்த, எட்டு ஆண்டுகளாக, 4,000 க்கும் அதிகமான இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் துவங்க இருக்கிறது.
வேலை வாய்ப்பற்ற இளைஞர், இளம்பெண்கள், இல்லத்தரசிகள், இப்பயிற்சியில் பங்கேற்கலாம். குறிப்பாக, சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து இலவசமாக பயிற்சி பெறலாம்.இதுகுறித்து நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் மைய பொறுப்பாளர்கள் கூறியதாவது:இலவச குறுகியகால திறன் பயிற்சியில், தையல் பயிற்சியில், எட்டாம் வகுப்புக்கு மேல் பயின்ற, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம்.
சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில், 10ம் வகுப்புக்கு மேல்படித்த, 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம். இலவச பயிற்சி பெறுவோருக்கு, வேலை வாய்ப்பும் உறுதி செய்து கொடுக்கப்படும்.
முதலில், பயிற்சிக்கான சேர்க்கையை முடித்த பிறகே, பயிற்சி துவங்கும் நாள் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 88707 25111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment