ECIL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – ரூ.55,000/- மாத ஊதியம்!
Electronics Corporation of India Limited (ECIL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Project Engineer, Technical Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ECIL காலிப்பணியிடங்கள்:
ECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Project Engineer – 11 பணியிடங்கள்
- Technical Officer – 22 பணியிடங்கள்
ECIL பணிகளுக்கான கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ECIL பணிகளுக்கான வயது வரம்பு:
- Project Engineer பணிக்கு 33 வயது எனவும்.
- Technical Officer பணிக்கு 30 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
ECIL பணிகளுக்கான ஊதியம்:
- Project Engineer பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை என்றும்,
- Technical Officer பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
ECIL தேர்வு முறை:
இந்த ECIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 08.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ECIL விண்ணப்பிக்கும் முறை:
- Project Engineer, Technical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (08.12.2023) சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in Interview -க்கு வரும் போது உடன் கொண்டு வந்து காலை 9.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification Link
Download Application Form Link
Online Application Link
🔻🔻🔻
No comments:
Post a Comment