ESIC நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.2,00,000/- || நேர்காணல் மட்டுமே!
ESIC என்னும் தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் Senior Resident, Specialist, Super Specialist பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ESIC வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
- ESIC நிறுவனத்தில் Senior Resident பணிக்கு என 36 பணியிடங்களும், Specialist பணிக்கு என 08 பணியிடங்களும், Super Specialist பணிக்கு என 06 பணியிடங்களும் காலியாக உள்ளது.
- MBBS, Post Graduate Degree, Post Graduate Diploma, MD, MS, DNB, DM ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை MCI அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள இயலும்.
- 24.11.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Senior Resident பணிக்கு 45 வயது எனவும், Specialist / Super Specialist பணிகளுக்கு 67 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.67,700/- முதல் ரூ.2,00,000- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இந்த ESIC நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 24.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ESIC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment