Search

Fenugreek Seeds: எடை குறைப்பு முதல் சரும் ஆரேக்கியம் வரை..! வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம்?

 

உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கும் மசாலா சமையல் பொருளாக வெந்தயம் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லமால் உடலின் எடையை குறைக்கவும் உதவுகிறது.

சமையல் அறையில் இருக்கும் பொருள்களில் இன்றியமையாததாக வெந்தயம் இருந்து வருகிறது. கசப்பான சுவையை கொண்டிருந்தாலும் சமைக்கும் உணவுக்கு நல்ல நறுமணத்தையும், ருசியையும் கொடுக்கும். சிறிய விதை வகையாக இருந்து வரும் வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இவை வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.

வெந்தயத்தில் ரிபோபிளாவின், செம்பு, பொட்டாசியம், போலிக் அமில், லியோனிக் அமிலம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, வைட்டமின் ஏ, பி6, சி, கே சத்துக்கள் இடம்பிடித்திருக்கின்றன. இவற்றுடன் நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஏராளமாக நிரம்பியுள்ளன.

வெந்தயத்தை எப்படியெல்லாம் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும் என்பது பற்றி பார்க்கலாம்.

தண்ணீர் ஊற வைத்தல்: வெந்தய விதைகளை ஒரு டிஸ்பூன் அளிவில் எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். தொடர்ந்து இதை செய்வதன் மூலம் உடல் எடையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உணரலாம்

வெந்தய டீ: தண்ணீரில் வெந்தயம் சேர்த்து அதை கொதிக்க வைத்து டீயாக பருகலாம். வெந்தயத்தை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள இது ஒரு இனிமையான மற்றும் பயனுள்ள வழியாகும்.

முளைகட்ட வைத்து சாப்பிடுவது: மற்ற பயறு, விதை வகைகள் முளைகட்ட வைப்பது போல் வெந்தயத்தையும் முளைகட்ட வைத்து பயன்படுத்துவதன் மூலம் அதிலிலுள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்க செய்யலாம்

வெந்தயத்தை பொடியாக அரைத்து பயன்படுத்துதல்: வெந்தயத்தை நன்கு அரைத்து பொடியாக்க சூப்க்ள், ஸ்மூத்திகளில் பயன்படுத்தலாம். இந்த தனித்துவமான முறை உங்கள் அன்றாட உணவுகளில் பல வகைகளில் வெந்தயத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துகிறது

எடை குறைப்பு தவிர செரிமானத்தை மேம்படுத்தும் பணியையும் வெந்தயம் மேற்கொள்கிறது. இதில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள், அதிக அளவு ஊட்ச்சத்துகள் ஒட்டு மொத்த உடல்நல ஆரோக்கியத்தை பேனி பாதுக்கிறது.

லேக்டேஷன் இருப்பை உறுதிபடுத்தும் வெந்தயம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் தலை முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், சரும ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கவும் உதவுகிறது.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment