GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேர்காணல் – பட்டதாரிகளுக்கான அருமையான வாய்ப்பு! - Agri Info

Adding Green to your Life

November 21, 2023

GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேர்காணல் – பட்டதாரிகளுக்கான அருமையான வாய்ப்பு!

 

GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேர்காணல் – பட்டதாரிகளுக்கான அருமையான வாய்ப்பு!

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (GRI Dindigul) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest / Part Time Teacher பணிக்கான காலியிடங்கள் நேர்காணல் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Guest / Part Time Teacher பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் (GRI Dindigul) காலியாக உள்ளது.

Guest / Part Time Teacher கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc, M.Phil பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் NET / SLET தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Guest / Part Time Teacher வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Guest / Part Time Teacher மாத ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் GRI திண்டுக்கல் நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

GRI Dindigul தேர்வு முறை:

21.11.2023 அன்று காலை 10.30 மணிக்கு GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தின் Indira Gandhi Block-ல் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

GRI Dindigul விண்ணப்பிக்கும் முறை:

இந்த GRI திண்டுக்கல் பல்கலைக்கழக பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை அத்துடன் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment