IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM Kancheepuram) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IIITDM காலிப்பணியிடங்கள்:
Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே IIITDM Kancheepuram நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Junior Research Fellow கல்வி:
CSE, ECE பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
Junior Research Fellow வயது:
இந்த IIITDM Kancheepuram நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Junior Research Fellow சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
IIITDM தேர்வு செய்யும் விதம்:
Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
IIITDM விண்ணப்பிக்கும் விதம்:
இந்த IIITDM Kancheepuram நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 01.12.2023 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment