IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கு என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B. Tech/ Graduate in any discipline / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 01.11.2023 தேதியின் படி, இப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து இப்பணிக்கு 19.11.2023 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 27.11.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அவகாசமும் தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment