இரயில்வே துறையில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – 1100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது! - Agri Info

Adding Green to your Life

November 28, 2023

இரயில்வே துறையில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – 1100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

 

இரயில்வே துறையில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – 1100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

RRC என்னும் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 25.10.2023 அன்று வெளியிட்டுள்ளது. இதில் வடகிழக்கு இரயில்வேயில் (NER) Apprentice பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 1104 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரயில்வே துறை பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Apprentice பணிக்கு என 1104 பணியிடங்கள் வடகிழக்கு இரயில்வேயில் காலியாக உள்ளது.

Apprentice கல்வி விவரம்:

Apprentice பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10ம் / 12ம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Apprentice வயது விவரம்:
  • இந்த வடகிழக்கு இரயில்வே சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25.11.2023 அன்றைய நாளின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், உடல் ஊனமுற்றவர்கள் – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
Apprentice ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் Apprenticeship விதிமுறைப்படி மாத ஊக்கத்தொகை பெறுவார்கள்.

வடகிழக்கு இரயில்வே தேர்வு செய்யும் விதம்:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வடகிழக்கு இரயில்வே விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / EWS / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.100/-
  • வடகிழக்கு இரயில்வே விண்ணப்பிக்கும் விதம்:

    இந்த வடகிழக்கு இரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 24.12.2023 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

    Download Notification Link

    Online Application Link


🔻🔻🔻

No comments:

Post a Comment