Jeera Water : இந்த ஒரு பானம் போதும் தலை முதல் கால் வரை பலன் பல! - Agri Info

Adding Green to your Life

November 26, 2023

Jeera Water : இந்த ஒரு பானம் போதும் தலை முதல் கால் வரை பலன் பல!

 சீரகத்தண்ணீரை குடிப்பது, உங்கள் உடலுக்கு செரிமானம் முதல் வளர்சிதை மாற்றம் வரை பல்வேறு பலன்களை கொடுக்கிறது. சீரகத்தண்ணீர் உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய சமையலறையில் சமையலில் சுவை மற்றும் மணம் இரண்டையும் அதிகரிக்க பயன்படுத்தும் ஒரு மசாலாப்பொருள் சீரகம். அது மட்டுமின்றி இந்திய பாராம்பரிய மருத்துவங்களில் மருந்தாகப்பயன்படுகிறது. அத்தனை ஆரோக்கியம் நிறைந்தது. 

சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் கே ஆகியவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. அது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஆக்ஸிஜன் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதில் உள்ள கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

மெக்னீசிய சத்து தசைகள் மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அழற்சி மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உடல் எடை குறைப்பில் உதவுகிறது.  

உணவு செரிக்க உதவுகிறது

சீரகத்தண்ணீர், செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களை உற்பத்தி செய்கிறது. இதனால் செரிமானம் எளிதாகி அஜீரணக்கோளாறு குறைகிறது.

வயிறு உப்புச பிரச்னைகளுக்கு தீர்வாகிறது

இதில் உள்ள வயிறு உப்புசத்தை நீக்ககூடிய சக்திகள் வாயு மற்றும் உப்புசத்தை நீக்க உதவுகின்றன. இதனால் செரிமானம் எளிதாகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

சீரகத்தண்ணீர் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, கொழுப்பை எரித்து, உடல் எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது

ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சீரகத்தண்ணீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய்க்கு எதிராக உடல் போராடுவதற்கு உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சரும அலர்ஜி ஏற்படுவதை குறைக்கிறது. சீரகத்தண்ணீரை வழக்கமாக குடித்துக்கொண்டு வரும்போது, கழிவு நீக்கத்தை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக பராமரிக்க உதவுகிறது.

மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னைகளை குறைக்கிறது

சீரகத்தண்ணீரில் உள்ள கிருமிகளுக்கு எதிரான பொருட்கள் சுவாசம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. தொண்டை கரகரப்பை சரிசெய்கிறது.

நினைவாற்றலை ஊக்கப்படுத்துகிறது

சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நரம்பு மண்டலத்தை சீராக்கி, நினைவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

உடலில் கழிவு நீக்கத்தை ஊக்குவிக்கிறது

சீரகத்தண்ணீர் டையூரெடிக்காக செயல்பட்டு, உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக கழிவு வெளியேற்றம் செய்துவிடுகிறது.

மாதவிடால் வலிகளை போக்குகிறது

மாதவிடாயால் ஏற்படும், இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவற்றை போக்கிறது. மாதவிடாயால் ஏற்படும் உடல் அசௌகரியங்களை தடுக்கிறது.

சீரகத்தண்ணீரை எப்படி பருக வேண்டும்?

சீரகத்தண்ணீரை தயார் செய்வதற்கு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஓரிரவு ஊறவைக்க வேண்டும். அதை வடிகட்டி அடுத்த நாள் காலையில் பருகவேண்டும். பெரும்பாலும், தண்ணீரை வெறும் வயிற்றில் பருவது நல்லது. அப்போதுதான் முழு பலன் கிடைக்கும்.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment