அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை – JRF பணிக்கு ரூ.31,000/- ஊதியம்! - Agri Info

Adding Green to your Life

November 15, 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை – JRF பணிக்கு ரூ.31,000/- ஊதியம்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை – JRF பணிக்கு ரூ.31,000/- ஊதியம்!

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 27.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Anna University காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:
  • அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் ME / M.Tech பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் CSIR – UGC NET, GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Junior Research Fellow வயது:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

Junior Research Fellow மாத சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Anna University தேர்வு முறை:

Written Test, Interview மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் guna_2012@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.11.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

No comments:

Post a Comment