NaBFID நிறுவனத்தில் 32 காலியிடங்கள் – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
Senior Analyst பணிக்கு என National Bank for Financing Infrastructure and Development (NaBFID) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
NaBFID காலிப்பணியிடங்கள்:
NaBFID நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Analyst பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Senior Analyst கல்வி விவரம்:
MBA, CA, CFA, ICWA, CMA, Post Graduate Degree, Post Graduate Diploma, MCA, ME, M.Tech, LLM ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
Senior Analyst அனுபவ விவரம்:
Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 04 ஆண்டுகள் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Senior Analyst வயது விவரம்:
01.10.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Senior Analyst ஊதிய விவரம்:
இந்த NaBFID நிறுவன பணிக்கு தேர்வு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
NaBFID தேர்வு செய்யும் முறை:
Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Shortlist ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NaBFID விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
Download Notification Link
🔻🔻🔻
No comments:
Post a Comment