சென்னை NIEPMD நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!
NIEPMD நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (21.11.2023) வெளியிட்டுள்ளது. Special Teacher பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பணிக்கான Walk-in Interview-ல் கலந்து கொண்டு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIEPMD பணியிடங்கள்:
NIEPMD நிறுவனத்தில் Special Teacher பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Special Teacher கல்வி:
Special Teacher பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் D.Ed.SE, B.Ed.SE ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Special Teacher வயது:
இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Special Teacher சம்பளம்:
Special Teacher பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு வருகைக்கு ரூ.250/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.20,000/- சம்பளமாக பெறுவார்கள்.
NIEPMD தேர்வு செய்யும் விதம்:
இந்த NIEPMD நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 30.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NIEPMD விண்ணப்பிக்கும் விதம்:
Special Teacher பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment