சென்னை NIEPMD நிறுவனத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.250/- ஒரு நாளுக்கான ஊதியம்!
NIEPMD நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Special Education Teacher பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
NIEPMD பணியிடங்கள்:
NIEPMD நிறுவனத்தில் காலியாக உள்ள Special Education Teacher பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Special Education Teacher கல்வி தகுதி:
Special Education Teacher பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Diploma, B.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Special Education Teacher வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Special Education Teacher மாத சம்பளம்:
இந்த NIEPMD நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ஒரு நாளுக்கு ரூ.250/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.22,000/- சம்பளமாக பெறுவார்கள்.
NIEPMD தேர்வு செய்யும் விதம்:
Special Education Teacher பணிக்கு தகுதியான நபர்கள் 28.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NIEPMD விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment