NLC India நிறுவனத்தில் காத்திருக்கும் Part Time வேலை – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான நல்ல சான்ஸ்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate Advisor to Director (Power) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
NLC India காலியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Associate Advisor to Director (Power) பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே NLC India நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Associate Advisor to Director கல்வி விவரம்:
Associate Advisor to Director (Power) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Associate Advisor to Director வயது விவரம்:
இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயது முதல் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Associate Advisor to Director ஊதிய விவரம்:
Associate Advisor to Director (Power) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் NLC India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
NLC India தேர்வு செய்யும் முறை:
இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NLC India விண்ணப்பிக்கும் வழிமுறை:
Associate Advisor to Director (Power) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 04.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻
No comments:
Post a Comment