வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு சர்க்கிள் ஆபிசர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய
பொதுத்துறை
வங்கியான
ஸ்டேட்
பாங்க்
ஆஃப்
இந்தியா
(SBI) வட்ட
அளவிலான
அதிகாரி
(CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
தற்போதைய
அறிவிப்பில்
நாடு
முழுவதும்
5,309 காலிப்
பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
CIRCLE
BASED OFFICERS
காலியிடங்களின் எண்ணிக்கை:
5,309
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தில்
பட்டப்படிப்பை
முடித்திருக்க
வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர்
31.10.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள்
இருக்க
வேண்டும்.
இருப்பினும்,
SC/ST பிரிவினருக்கு
5 ஆண்டுகளும்,
OBC பிரிவினருக்கு
3 ஆண்டுகளும்
PWD பிரிவினருக்கு
10 ஆண்டுகளும்,
வயது
சலுகை
உண்டு.
அடிப்படை சம்பளம்: ரூ.
36,000
தேர்வு
செய்யப்படும்
முறை: இந்த பணியிடங்களுக்கு
எழுத்துத்
தேர்வு
மற்றும்
நேர்முகத்
தேர்வு
அடிப்படையில்
தகுதியானவர்கள்
நிரப்படுவார்கள்.
எழுத்து
தேர்வு
என்பது
கணினி
வழி
தேர்வாகும்.
எழுத்துத்
தேர்வு:
எழுத்துத் தேர்வு இரண்டு
பிரிவுகளாக
நடைபெறும்.
அவை
கொள்குறி
வகை
வினாத்
தேர்வு
(Objective Test) மற்றும் விரிவான விடையளித்தல்
தேர்வு
(Descriptive Test) ஆகும்.
கொள்குறி வகை வினாத்
தேர்வு
120 மதிப்பெண்களுக்கு
நடைபெறும்.
இதில்
ஆங்கிலம்
(English language -
30), கணினி திறனறிதல்
(Computer Aptitude - 20) வங்கி
தொடர்பான
கேள்விகள்
(Banking Knowledge - 40) மற்றும் பொது அறிவு
மற்றும்
பொருளாதாரம்
(General Awareness / Economy - 30) ஆகிய பகுதிகளில்
இருந்து
மொத்தம்
120 கேள்விகள்
இடம்பெறும்.
இந்த
தேர்வுக்கான
மொத்த
கால
அளவு
மொத்தம்
2 மணி
நேரம்.
இதனைத் தொடர்ந்து,
இரண்டாம்
பகுதியான
விரிவாக
எழுதுதல்
தேர்வு
நடைபெறும்.
இதில்
கட்டுரை
அல்லது
கடிதல்
எழுதுதல்
தொடர்பாக
இரண்டு
வினாக்களுக்கு
விடையளிக்க
வேண்டும்.
50 மதிப்பெண்களுக்கு
இந்த
தேர்வு
நடைபெறும்.
இதற்கான
கால
அளவு
30 நிமிடங்கள்.
நேர்முகத்
தேர்வு
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள்
சான்றிதழ்
சரிபார்ப்பு
மற்றும்
நேர்முகத்
தேர்வுக்கு
அழைக்கப்படுவர்.
எழுத்துத்
தேர்வு
மற்றும்
நேர்முகத்
தேர்வில்
பெற்ற
மதிப்பெண்களைக்
கொண்டு
இறுதி
தேர்ச்சிப்
பட்டியல்
வெளியிடப்பட்டு,
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும்
முறை: இந்த பணியிடங்களுக்கு
ஆன்லைன்
மூலம்
மட்டுமே
விண்ணப்பிக்க
முடியும்.
இதற்கு https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதள
பக்கத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க
கடைசி
தேதி:
12.12.2023
விண்ணப்பக்
கட்டணம்: இதற்கான விண்ணப்பக்
கட்டணம்
பொதுப்
பிரிவு,
OBC மற்றும்
EWS பிரிவினருக்கு
ரூ.750
ஆக
உள்ளது.
SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக்
கட்டணம்
இல்லை.
இந்த அறிவிப்பு
தொடர்பாக
மேலும்
விவரங்கள்
அறிய https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 என்ற இணையதளப் பக்கத்தினைப்
பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment