SDAT தமிழக விளையாட்டு துறையில் ரூ.1.35 லட்சம் ஊதியமாக பெற வாய்ப்பு – விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!
சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Expert Coach பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் 01 முதல் 03 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
SDAT காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், SDAT நிறுவனத்தில் Expert Coach பணிக்கென 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Expert Coach பணிக்கான தகுதி:
- Expert Coach பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ஒலிம்பிக், World Championship அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவராக, கலந்து கொண்டவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Level – 3 Course / A License / Pro License முடித்தவராகவும் இருக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Expert Coach வயது விவரம்:
இந்த விளையாட்டு துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Expert Coach சம்பள விவரம்:
Expert Coach பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,35,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
SDAT தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDAT விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த தமிழக விளையாட்டு துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து establishment.sdat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.11.2023 அன்றுக்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
No comments:
Post a Comment