SSC GD கான்ஸ்டபிள் அறிவிப்பு 2024 – பதிவுகள் தொடக்கம்.. உடனே பாருங்க!
SSC GD கான்ஸ்டபிள் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
SSC GD கான்ஸ்டபிள்:
பணியாளர் தேர்வாணையம் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), NIA, SSF மற்றும் ரைபிள்மேன் (GD) அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வில் கான்ஸ்டபிள்கள் (GD) தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 26146 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி, SSC GD கான்ஸ்டபிள் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நவம்பர் 24ம் தேதியான இன்று முதல் தொடங்கி, டிசம்பர் 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 23 வயது வரம்பிற்கு உட்பட்டவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு அறிவிப்பின்படி, பிப்ரவரி – மார்ச் 2024 மாதங்களில் நடத்தப்படும். தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். தேர்வர்கள் ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் அதிக விவரங்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment