Tangedco வின் புதிய செயலி அறிமுகம் – டிச. முதல் அமல்!
தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய செயலி அறிமுகம்:
ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மென்பொருள் பொறியாளர்கள் தற்போது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக ஓய்வூதியதாரர்களுக்கு புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ஆவணங்களை நேரடியாக சென்று வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் செயலி மூலமாகவே தங்களது வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்து கொள்ளலாம். இதற்கான மொபைல் செயலி வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயோமெட்ரிக் முறை மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களின் விவரங்களை அங்கீகரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment