மத்திய அரசின் THDC நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்! - Agri Info

Adding Green to your Life

November 21, 2023

மத்திய அரசின் THDC நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

மத்திய அரசின் THDC நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

PESB நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் THDC India Limited-ல் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

THDC India Limited காலிப்பணியிடங்கள்:

Director (Finance) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் THDC India Limited-ல் காலியாக உள்ளது.

Director (Finance) கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA, MBA, PGDM தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Director (Finance) வயது விவரம்:

இந்த THDC நிறுவனம் சார்ந்த பணிக்கு 45 வயது பூர்த்தி அடையாத நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Director (Finance) சம்பள விவரம்:

Director (Finance) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.


THDC India Limited தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

THDC India Limited விண்ணப்பிக்கும் முறை:
  • இந்த THDC நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
  • 21.11.2023 என்ற கடைசி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Download Notification Link



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment