TNPSC AAO & AHO வேலைவாய்ப்பு 2023 – 263 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.75,900/-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer மற்றும் Assistant Horticultural Officer எனப்படும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவானது 25.11.2023 அன்று தொடங்கி 24.12.2023 வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை போன்ற அனைத்து தகவல்களையும் வழங்கி உள்ளோம்.
TNPSC காலிப்பணியிடங்கள்:
- Assistant Agricultural Officer (Post Code No.102) – 79*+5 C/F
- Assistant Horticultural Officer (Post Code No.105) – 148*+31 C/F
என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNPSC Assistant Agricultural Officer வயது வரம்பு:
SC/ST :
விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
பொது பிரிவினர் :
விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் 01-07-2024 அன்று 30 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.
TNPSC AAO கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது தமிழ்நாட்டின் மூலம் இணைக்கப்பட்ட விவசாய பல்கலைக்கழகம் அல்லது வேளாண் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் வேளாண்மையில் இரண்டு வருட டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
TNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் கல்வி தகுதி:
மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தோட்டக்கலையில் இரண்டு ஆண்டுகளில் டிப்ளோமா படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC மாத ஊதியம்:
உதவி வேளாண்மை அலுவலர் & உதவி தோட்டக்கலை அலுவலர்: ரூ.20600 – ரூ.65500/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) Objective Type for Both The Posts மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பணிகளுக்கான CBT தேர்வானது 07.02.2024 அன்று நடைபெற உள்ளது.
TNPSC AAO & AHO தேர்வு கட்டணம்:
- தேர்வு கட்டணம்: ரூ. 100/-
- (முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).
TNPSC AAO Notification 2023 விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 25.11.2023 முதல் 24.12.2023 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2023 Pdf
Apply Online
🔻🔻🔻
No comments:
Post a Comment