TNRD தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலை – எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத் தலைப்பில் ஏற்பட்டுள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 11-12-2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக காலிப்பணியிடங்கள்:
- ஈப்பு ஓட்டுநர் – 1 பணியிடம்
- அலுவலக உதவியாளர் -1 பணியிடம்
என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஈப்பு ஓட்டுநர் தகுதி விவரங்கள்:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- மோட்டார் வாகன சட்டம் 1988-இன்படி, தகுதி வாய்ந்த அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் தகுதி விவரங்கள்:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://tiruvarur.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11-12-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment